Breaking News

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் பெருந்தொற்றினால் தொற்றினால் மரணம்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் பெருந்தொற்றினால் தொற்றினால் மரணம்!

தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா (Satish Dhupelia) கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் வழித்தோன்றல்கள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.

 

அந்தவகையில் காந்தியின் கொள்ளுப்பேரனும் மணிலால் காந்தியின் பேரனுமான சதீஷ் துபேலியா நிமோனியாவால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஒரு மாதக்காலமாக ஜோகனஸ்பர்க்கிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந் நிலையில் சிகிச்சையின்போதே அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ஞாயிறு மாலையில் மாரடைப்பால் சதீஷ் துபேலியா உயிரிழந்ததாக அவரின் சகோதரி உமா துபேலியா தெரிவித்துள்ளார்.

 

66 வயதான சதீஷ் துபேலியா ஊடகத்துறையில் ஒளிப்பதிவாளராகவும், புகைப்படக்காரராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.