டெஸ்லா நிறுவனத்தில் ஆட்டோபைலட் குழு இயக்குனராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் எல்லுசுவாமி தேர்வு செய்யப்பட்டார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் 'டெஸ்லா' நிறுவனம், இந்தியாவில் கால் பதித்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் மின்சார கார் விற்பனையில்,  போர்ட் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது. அதோடு அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் ஆட்டோபைலட் குழு இயக்குனராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் எல்லுசுவாமியை பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என்பதை எலான் மஸ்க் விவரித்துள்ளார்.

இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், “டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் குழுவை தொடங்க உள்ளது என நான் டுவிட் செய்திருந்தேன். அந்த டுவிட் மூலம் முதன் முதலில் ஆட்டோ பைலட் குழுவில் தேர்வு செய்யப்பட்டது அசோக் தான்” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவுக்கான பணியாட்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். அந்த துறையில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் சொல்லி இருந்தார்.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் முதல் ஆளாக அசோக் அசோக் எல்லுசுவாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி, கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் முடித்தவர். பின் வாப்கோ வாகன கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் வோக்ஸ்வேகன் எலக்ட்ரானிக் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றியவர்.

அதன்பின், அவர் டெஸ்லாவில் மென்பொருள் வல்லுனராக பணிக்கு சேர்ந்தார். இப்போது டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனராக உயர்ந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.