இலங்கைக்குள் பிரவேசிக்க முற்பட்ட பிரேசில் நாட்டு இளம் பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நேற்று கைது செய்து மீண்டும் பிரேசிலுக்கு நாடு கடத்தியுள்ளனர்.

அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 23 வயது பிரேசிலைச் சேர்ந்த பெண்.

பிரேசில் அரசாங்கம் அவரைக் கைது செய்யத் தயாராகும் போது அவர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.

எனவே, இவரைக் கைது செய்ய பிரேசில் அரசாங்கம் இன்டர்போலின் உதவியை நாடியிருந்த நிலையில், இன்டர்போல் சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பித்தது.

இவருடைய தாய்லாந்து விசா காலாவதியானதால், தாய்லாந்தில் இருந்து இலங்கை சென்றுள்ளார்.

இந்த நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண், நீண்ட நாட்களாக தாய்லாந்தில் தங்கியிருந்த நிலையில், சர்வதேச பொலிஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக வேறு நாட்டிற்குள் பிரவேசிக்க திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.