இன்று நியூசிலாந்தில் 95 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் ஒருவர் மிடில்மோர்னையிலும் மற்றைய நபர் ஆக்லாந்து நகர மருத்துவமனையிலும் உயிரிழந்ததாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களில் ஆக்லாந்தில் 75 பேரும், வைகாடோவில் 11 பேரும், Bay of Plenty இல் 05 பேரும், Rotorua வில் ஒருவரும், Nelson Tasman இல் ஒருவரும் மற்றும் Canterbury இல் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 04 பேர் உட்பட 56 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 9952 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 12,347 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 21,744 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் 3374 முதல் டோஸ்கள், 9225 இரண்டாவது டோஸ்கள் டோஸ்கள் ஆகும்.

இந்நிலையில் நியூசிலாந்தில் 94 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் மற்றும் 89 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.