இன்று நியூசிலாந்தில் 103 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் ஆக்லாந்தில் 88 பேரும், வைகாடோவில் 09 பேரும், Bay of Plenty இல் 05 பேரும் இல் Rotorua வில் ஒருவரும்  தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 05 பேர் உட்பட 70 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்டுத்தலில் இரண்டு பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 9457 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 12,251 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 22,859 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் 3786 முதல் டோஸ்கள், 9339 இரண்டாவது டோஸ்கள் டோஸ்கள் ஆகும்.

இந்நிலையில் நியூசிலாந்தில் 94 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் மற்றும் 88 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.