ரஷ்யாவில் அரசு அலுவலகம் ஒன்றில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரசு பொது சேவை அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததுடன் பத்து வயது சிறுமி உட்பட நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸார் குற்றவாளியை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் அவர் மாஸ்கோவில் வசிக்கும் 45 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா எனபது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்ற‌ நிலையில் குற்றவாளியின் அடையாளம் மற்றும் துப்பாக்குச்சூடு நடத்தியதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

ரஷ்யாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது அரிதான ஒன்று ஆகும். அங்கு நவம்பர் 2020 இல், மாஸ்கோவின் தெற்கே வோரோனேஜ் நகருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ தளத்தில் 20 வயதான சிப்பாய் ஒருவர் மூன்று சக இராணுவ வீரர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.