பிரியந்த குமாரவின் படுகொலையை அடிப்படையாக வைத்து இன உணர்வுகளை தூண்டுவதன் மூலம் சமூகங்களிடையிலான ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு சிலர் முயல்கின்றனர் என கண்டிமாவட்ட மதங்களிற்கு குழு தெரிவித்துள்ளது.

பிரியந்தவின் கொலையை ஒரு தீவிரவாத செயலாக மக்கள் பார்க்கவேண்டும் இனரீதியிலான நடவடிக்கையாக பார்க்க கூடாது என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் சமூகங்கள் மத்தியிலான ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டாம் என குழுவின் ஏற்பாட்டாளர் காமினிஜெயவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ள அவர்சில குழுக்கள் இந்த சம்பவத்தின் அடிப்பiயி;ல்  இனவாதத்தை தூண்டி இன ஐக்கியத்தை குழப்புவதற்கு முயல்கின்றன என்பது வெளிப்படையாக தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் தீவிரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் என்ற செய்தியை அனைவரும் தெரிவிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.