தெற்கு ஆக்லாந்தின் Favona வில் உள்ள Savill சாலையில் நேற்றிரவு கார் மற்றும் டிரக் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த விபத்திற்கு இரவு 9.10 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டன.

மேலும் நேற்று மாலை Manawatu, Pohangina வில் உள்ள Te Awa வீதியில் வாகனம் ஒன்றின் பின்பகுதியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாலை 6 மணியளவில் அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.