புதிய கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை எவரும் உயிரிழந்ததாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஓமிக்ரோன் பரவுவதை தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள அதேவேளை ஒமிக்ரோனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தரவுகளை சேகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் புதிய வைரசினால் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ள போதிலும் இதுவரை  உயிரிழப்புகள்  ஏற்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் கிறிஸ்டியன் லின்டிமியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் டெல்டா வைரஸ் குறித்தும் அவதானத்துடனும் இருக்கவேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.