South Island இல் நேற்று இரவு இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Hurunui மாவட்டத்தில் Motunau இல் உள்ள Glendhu சாலையில் ஒரு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து இரவு 8.30 மணிக்கு முன்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இரண்டாவது நபர் ஹெலிகாப்டர் மூலம் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நேற்றிரவு 11 மணிக்குப் பின்னர் Mataura அருகிலுள்ள Wyndham  சாலையில் ஒரு பயங்கரமான விபத்தைத் தொடர்ந்து சவுத்லேண்டில் பொலிஸார் சாட்சிகளுக்காக முறையிட்டுள்ளனர்.

 விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த நேரத்தில் அப்பகுதியில் இருண்ட நிற Mazda ute ஐ யாராவது பார்த்திருந்தால் அவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

211204/5529 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி, 105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.