இன்று காலை Central Christchurch இல் நடந்த ஒரு தீவிர தாக்குதல் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் Moorhouse அவென்யூவில் உள்ள Countdown அங்காடி கார்பார்க்கில் காயமடைந்த நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார், மேலும் அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் காட்சிப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, P048837013 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.