இன்று நியூசிலாந்தில் 98 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 07 பேர் உட்பட 73 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமூகத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 8931 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 12,087 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 39,264 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் 7352 முதல் டோஸ்கள், 17,389 இரண்டாவது டோஸ்கள், 1007 மூன்றாவது முதன்மை டோஸ்கள் மற்றும் 13,516 பூஸ்டர் டோஸ்கள் ஆகும்