இங்கிலாந்துடனான தனது எல்லையை திறப்பதற்கு பிரான்ஸ் தீர்மானித்துள்ள அதேவேளை தனது நாட்டவர்களையும்,லொறிசாரதிகளையும் மாத்திரம் அந்த எல்லையை பயன்படுத்த அனுமதிப்பது என தீர்மானித்துள்ளது.

பிரான்ஸ் இங்கிலாந்துடனான தனது எல்லையை தனது நாட்டவர்களிற்கும் லொறிசாரதிகளுக்கும் திறப்பதற்கு தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் எல்லையை பயன்படுத்துபவர்கள் அனைவரும் தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்சில் நிரந்தரமாக வசிக்கும் பிரிட்டிஸ் பிரஜைகளும் பிரான்ஸ் பிரஜைகள் அல்லாதவர்களும் எல்லையை பயன்படுத்த முடியும் என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் பிரிட்டனில் வசிக்கும் பிரான்ஸ் பிரஜைகள் இல்லாதவர்களிற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பிரித்தானியாவிற்கான போக்குவரத்து தடைகளை உடனடியாக  ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் நீக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் மருந்துகள் உட்பட விநியோகங்கள் தொடர்ந்து இ;டம்பெறுவதை உறுதி செய்வதற்கு போக்குவரத்து தடைகள் நீக்கப்படுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்தே பல உலக நாடுகள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.