ஆக்லாந்தில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு பல தசாப்தங்களில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊர்வல அமைப்பாளர்கள் சாண்டா ஊர்வலம் கொவிட் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Santa Parade தலைவர் மைக்கேல் பார்னெட்,சாண்டா அணிவகுப்பு  2022 இல் பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நியூசிலாந்தின் மிகப்பெரிய சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வான BDO Lake Taupo Cycle challenge கொவிட் தொற்றின் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு முன்னோக்கி செல்ல தற்போதைய நிலைமை மிகவும் நிச்சயமற்றது என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.