North Island இல் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வெகுஜன நிகழ்வு ஒன்றை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கலந்து கொண்டது தொடர்பாக நான்கு பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆக்லாந்தில், 63 வயதான ஒருவர் கொவிட் -19 பொது சுகாதார விதிமுறை மற்றும் எச்சரிக்கை நிலை 3 உத்தரவின் கீழ் ஒரு ஆணைக்கு இணங்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டார். 

அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் ஆடியோ காட்சி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், அவர் ஜாமீன் நிபந்தனைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

"சனிக்கிழமையன்று நடந்த நிகழ்வு ஆக்லாந்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை நிலை 3 கட்டுப்பாடுகளை மீறியது,மற்றும் இது பற்றிய எங்கள் விசாரணை தொடர்கிறது என போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர்கூறினார்.

இதற்கிடையில், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பாக ஹாமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இரண்டு வைகாடோ ஆண்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் 46 வயதான ஒருவர் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டு, நவம்பர் 17 ஆம் திகதி ஆஜராக உள்ளதாகவும், 56 வயதான ஒருவர் வெகுஜனக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த நபர் நவம்பர் 16ஆம் திகதி ஆஜர்படுத்தப்படுவார்.

மேலும் மண்டேர் பூங்காவில் வெகுஜனக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பாக அக்டோபர் 25 அன்று 47 வயதான ஒருவரை வாங்கேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.