ஆர்தர்ஸ் பாஸ் அருகே நேற்று நடந்த பாறை சரிவு காரணமாக West Coast மற்றும் கிறிஸ்ட்சர்ச்சை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

குறித்த சரிவுகளை அகற்ற ஹெலிகாப்டரை பயன்படுத்துகின்றநிலையில் நிறைய பாறைகள் தொடர்ந்து கீழே வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

தொடர்ச்சியான கனமழையும் வேலையை மிகவும் சவாலாக மாற்றுகிறது என தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலையின் நிலை குறித்த தகவல் நாளை காலை 10 மணியளவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வாகன ஓட்டுனர்கள் Lewis Pass ஐ பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்