இன்று நாட்டில் 94 சமூக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஐந்து பேர் உட்பட 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை சமூகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2099 ஆகும.

அவற்றில் 2030 பேர் ஆக்லாந்தில் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் 1360 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி எண்களின் அடிப்படையில் இதுவரை 6,387,870 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 3,582,822 (85 சதவீதம்) முதல் அளவுகள், மற்றும் 2,805,048 (67 சதவீதம்) இரண்டாவது அளவுகள் ஆகும்.

ஆக்லாந்தில்,89 சதவிகிதம் தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் 72 சதவிகிதம் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் நேற்றையதினம் நார்த்லேண்ட் இன்று இரவு 11.59 மணிக்கு எச்சரிக்கை நிலை 2இற்கு செல்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.