நியூசிலாந்தில் இன்று 71 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.இவை அனைத்தும் ஆக்லாந்தில் அடையாளம் காணப்பட்டவை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"சோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த கருவிகளாக உள்ளன. தயவுசெய்து நீங்கள் வெளியே செல்லும்போது முகக் கவசங்களை அணிந்து அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்." என பொது சுகாதார இயக்குனர் டாக்டர் கரோலின் மெக்ல்னே தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 5 பேர் உட்பட 33 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது சமூக தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1790ஆக அதிகரித்துள்ளது.

மற்றும் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நியூசிலாந்தில் தொற்று உறுதிசெய்யப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4472 ஆகும்.

நேற்று ஆக்லாந்தில் 13,960 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன மேலும் நேற்றையதினம் நாட்டில் 68,787 தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டன ,அவற்றில் 15,704 முதல் அளவுகள் மற்றும் 53,083 இரண்டாவது அளவுகள் ஆகும்.