ஜாமீனில் இருந்த 22 வயதான பெண் மீது சட்டவிரோதமாக ஆக்லாந்தின் எல்லையைத் தாண்டி, Far North இற்கு பயணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குழந்தை பராமரிப்பு ஏற்பாடுகளுக்கு பயண விலக்கு அளிக்கப்பட்ட மற்றொரு நபருடன் அவர் வடக்கு எல்லையைத் தாண்டியதாக போலீசார் கூறுகின்றனர்.

திங்கட்கிழமை பிற்பகல் Far North இல் உள்ள பாப்பரூர் முகவரிக்கு போலீசார் சென்ற பிறகு குறித்த பெண்ணை கண்டுபிடித்தனர்.

குறித்த பெண் ஜாமீன் நிபந்தனைகளை மீறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனின் நிபந்தனைகளின்படி அவர் ஆக்லாந்தில் வசிக்க வேண்டும், எனவே அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டார்.

கொவிட் - 19 உத்தரவை பின்பற்ற தவறியதாக பெண் மீது குற்றம் சாட்டப்பட்டதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.

அவர் வாங்கேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் அக்டோபர் 27ஆம் திகதி அன்று கைட்டியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.