தென்கிழக்கு ஆக்லாந்தில் திங்கட்கிழமை (11) காலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.

காலை 6.20 மணியளவில் கிழக்கு தமாகியில் எல் கோபர் டிரைவ் அருகே உள்ள ஹைப்ரூக் டிரைவில் இரண்டு வாகனங்கள் மோதுன்டு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவருடன் பயணித்த பயணி இருவரும் பலத்த காயமடைந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.