இந்த வார இறுதியில் பள்ளி விடுமுறை முடிந்ததும் ஆக்லாந்து பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4ஆம் தவணைக்காக பள்ளிகளை மீண்டும் திறக்க முடியும் என்ற ஆலோசனை ஆரம்ப ஆலோசனையாக இருந்த நிலையில் அது இப்போது மாறிவிட்டதாக பிரதம மந்திரி ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ...

"இன்று, பொது சுகாதாரக் குழு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது, ஆக்லாந்தில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு முன்பே வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது."

பள்ளி மற்றும் ஆரம்பக் கற்றல் ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு 2022 ஜனவரி முதலாம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கொவிட் - 19 மறுமொழி மற்றும் கல்வி அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இந்த ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு திரும்பாத ஒரு சூழ்நிலை "மோசமான சூழ்நிலை" என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு வாரமும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு அதன் முடிவை ஆய்வு செய்யும் 

வருட இறுதிக்குள் பள்ளிகள் திறக்கப்பட்டால் ஆசிரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்றால், அந்த ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் பரிசோதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

பணிக்கு திரும்பும் முன் அனைத்து ஆசிரியர்களும் சோதனை செய்யப்பட வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்,