வீதியோரமாக கைவிடப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் இருந்து 126 குடியேற்றவாசிகளை  மீட்டுள்ளதாக குவாத்தமலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்கலன்  ஒன்றிற்குள் அலறல் சத்தம் கேட்பதாக உள்ளுர் மக்கள் தெரிவித்ததை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கொள்கலனிற்குள்  குடியேற்றவாசிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களை மெக்சிக்கோ ஊடாக அமெரிக்காவிற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்து பணம் வாங்கிய ஆள்கடத்தல்காரர்கள் அவர்களை கொள்கலனிற்குள் கைவிட்டுவிட்டு சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் ஹெய்ட்டியை சேர்ந்தவர்கள் நேபாளத்தை சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்கலனிற்குள் இருந்து அலறல்களையும்  அதனை தட்டும் சத்தத்தையும் கேட்டோம் அதனை திறந்து பார்த்தவேளை ஆவணங்கள் அற்ற 126 பேர் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிற்கு உணவு குடிநீரை வழங்கிய தற்காலிக தங்குமிடத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்டவர்களை ஹொண்டுராசிடம் கையளிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களின் முன்னர் அமெரிக்க எல்லையில் மூன்று கொள்கலனிற்குள் 350 குழந்தைகள் உட்பட 652 பேரை மெக்சிக்கோ அதிகாரிகள் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.