இந்திய நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 4ஆம் திகதி மதிப்பின்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் மின் உற்பத்தி தொடங்க உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நிலைமை விரைவில் சீரடையும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.