ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்மு மாவட்டத்தில் இட்ஹா சங்கம் என்ற பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது, அந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இதையடுத்து, படுகாயமடைந்த 2 ஆசிரியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஆசிரியர்கள் இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் இந்து, இஸ்லாமிய ஆசிரியர்களை பிரித்துள்ளனர். இந்த 2 ஆசிரியர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்ததையடுத்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலாக மக்களை குறிவைத்து தாக்குதல்களை பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 2 ஆசிரியர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜம்முவில் பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்