தரைப்படை, கடற்படை,விமானப்படை தவிர அமெரிக்காவில் ‘ஸ்பேஸ் போர்ஸ்’ என்ற விண்வெளிப்படையுள்ளது. இப்  படைப்பிரிவில் 16 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்  விண்வெளிப்படை அமெரிக்க தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் உள்ளிட்ட சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந் நிலையில் இப் படைப்பிரிவிலுள்ள வீரர்களை எவ்வாறு அழைப்பது என்பது குறித்து யோசனைகள் அளிக்க பொதுமக்களிடம் கருத்துக்கேட்கப்பட்டது.

அதில் பெரும்பாலானோர் இந்த படை வீரர்களை ’கார்டியன்ஸ்’ என அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், அமெரிக்க விண்வெளி படையின் பணியாற்றும் வீரர்கள் ’கார்டியன்ஸ்’ (Guardians )என அழைக்கப்படுவார்கள் என்று நேற்றைய தினம்  அறிவிக்கப்பட்டது.