ஆக்சிஜன் தட்டுப்பாடை நிவர்த்தி செய்யும் வகையில்  நாடுமுழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள,மற்றும் முக்கிய இடங்களில் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடியின் அவசர பாதுகாப்பு நிதி ஒதுக்கப்பட்டது.

அவற்றில் 1,100 ஆலைகள் ஏற்கனவே செயல்பாடுகளை தொடங்கி விட்டன.இவற்றில் 35 பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் நடைபெற்றது.

அங்கு கட்டப்பட்டிருந்த ஆக்சிஜன் ஆலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதேநேரத்தில் நாடு முழுவதும் கட்டப்பட்ட ஏனைய 34 ஆலைகளும் திறக்கப்பட்டன. அத்துடன் ஏற்கனவே கட்டப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் செயல்பாட்டுக்கு வந்தன.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேனி, ராமநாதபுரம், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் பிரதமர் பாதுகாப்பு நிதியின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் நிலையங்களும் செயல்பாட்டுக்கு வந்தன.

அந்தந்த இடங்களில் உள்ள அதிகாரிகள் எம்.பி., எம்,.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலமாக கலந்துகொண்டனர்.

மேலும் தமிழ் நாட்டில் மட்டும் பிரதமர் பாதுகாப்பு நிதியில் இருந்து 70 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆக்சிஜன் நிலையங்கள் திறக்கப்படும் நிகழ்ச்சியில் அந்தந்த மாநில சுகாதார மந்திரிகள் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலமாக பிரதமருடன் அவர்கள் உரையாடியமை குறிப்பிடத்தக்கது