கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற வாலிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வைஷ்ணவியும் (19) அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த அருண்குமார் (23) என்பவரும் காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில மாதங்களாக கணவன்  மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால் அருண்குமார் பாண்டியன்நகர் பண்ணாரியம்மன் நகரில் புதியதாக வாடகை வீடு பார்த்து மனைவியுடன் வசித்து வந்தார். 

கடந்த மூன்றாம் திகதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அருண்குமார் பெல்ட்டால் வைஷ்ணவியின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தப்பிச்சென்று விட்டார்.

இதையடுத்து அவரை பிடிக்க திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்  கந்தசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி அருண்குமாரை தேடி வந்த நிலையில் நேற்றிரவு கூத்தம்பாளையம் பகுதியில் நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்த போது அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 

இந்நிலையில் குறித்த வாலிபர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 

நான் வைஷ்ணவியை திருமணம் செய்து கொண்டது வைஷ்ணவியின் தாய்க்கு பிடிக்கவில்லை. பொருளாதாரத்தில் நான் மிகவும் பின் தங்கி இருந்ததால் என்னை மிகவும் மட்டம் தட்டினர். எனது மனைவி வைஷ்ணவி அவரது தாய் வீட்டில் வசிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். 

இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதுபோல் கடந்த 3 ஆம் திகதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை பெல்ட்டால் இறுக்கி கொன்று விட்டு தப்பிசென்றேன் என தெரிவித்துள்ளார்.