Pfizer நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கடந்த வாரம் கப்பல் மூலம் இஸ்ரேல் கொண்டு வரப்பட்டன. அந்தவகையில் நேற்று முதன்முறையாக  இத்  தடுப்பூசியானது அந் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்குச் (Benjamin Netanyahu) செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் ,ஷீபா மருத்துவ மையத்தின் டைரக்டர்  மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர்  ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இஸ்ரேலில் கொரோனாவால் இதுவரை 3ஆயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர். 90 லட்சம் மக்கள் தொகையில் 20% பேருக்கு தேவையான தடுப்பூசி ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.