ஆறு மணித்தியாலங்கள் செயல் இழந்த நிலையிலிருந்த பேஸ்புக் வட்ஸ்அப் இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

சுமார் ஆறுமணித்தியாலத்திற்கு மேல் பேஸ்புக் வட்ஸ்அப் இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களை பயனாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

இந்த மூன்று சமூக ஊடகங்களும் பேஸபுக் நிறுவனத்திற்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடக செயல் இழப்புகளை கண்காணிக்கும் டவுன்டிடக்டர் இதுவரை ஏற்பட்ட செயல் இழப்புகளில் இதுவே மிகப்பெரியது என தெரிவித்துள்ளது.10.6 மில்லியன் பயனாளர்கள் இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது என டவுன்டிடக்டர் தெரிவித்துள்ளது.

2019லேயே இறுதியாக பேஸ்புக் இவ்வாறாதொரு செயல்இழப்பை சந்தித்திருந்தது.
செயல் இழப்பிற்காக பேஸ்புக் மன்னிப்பு கோரியிருந்தது.