டில்லியில், ஏர் இந்தியா விமானத்தை ஏற்றிவந்த டிரக் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவால் விற்பனை செய்யப்பட்ட பழைய விமானம் நேற்று  ராட்சத டிரக் டிரக்கில் கொண்டு செல்லப்பட்டது.

டில்லி இந்திரா காந்தி, சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே டில்லி - குருகிராம் நெடுஞ்சாலையின் குறுக்கே நடைமேடை பாலத்தினை கடந்து சென்ற போது பாலத்திற்கு அடியில் விமானத்துடன் ராட்சத டிரக் சிக்கிக்கொண்டது.

தகவலறிந்த போக்குவரத்து பொலிஸார் டிரக்குடன் விமானத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விமானம் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

இதற்கு முன் 2019 ம் ஆண்டு, இதேபோன்று கைவிடப்பட்ட இந்தியா போஸ்ட் விமானத்தை ஏற்றிச் சென்ற ஒரு டிரக், மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உள்ள பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்டது.

அது பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.