கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளைக் கடைபிடிக்காமல், செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததால், சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவும் பெண்ணொருவரும் செல்ஃபி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்கள். அந்தப் படத்தில் இருவருமே முகக் கவசம் அணியவில்லை. இந்தப் படம், டிசம்பர் மாத தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பீன்யேரா மன்னிப்புக் கேட்டார்.

அதற்கமைய அதிபரின் வீடு கசாகுவா நகரத்தில், கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த கடற்கரையில், அந்தப் பெண் செல்ஃபி எடுக்க வேண்டுமென்று கேட்டபோதாவது தாம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் ஒப்புக் கொண்டார் பீன்யேரா.

மேலும் ,சிலி நாட்டில், பொது வெளியில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.