உலகளாவிய அளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் சிங்கப்பூரில் அதிகரிப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

மூன்றாவது அலையின் காரணமாக சிங்கப்பூரில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடாத வாரும் , வீட்டிலிருந்தே வேலை செய்யவும் வலியுறுத்தப்படுகிறது மேலும்  சமூக கூட்டங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும்,பொழுதுபோக்கு கூடங்களுக்கும், தடைவிதிக்கப்பட்டுள்ளது .

தடுப்பூசி போடுவதும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது மேலும் ,50 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் செயல்படுத்தப்படவும் உள்ளது .