“தி கிரே மேன்” படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்க உள்ளனர்.நெட் பிளிக்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் தனுஷ் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் தனுஷுடன் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படம் மூலமாக தனுஷ் இரண்டாவது முறையாக ஹாலிவுட்டில் கால் பதிப்பது குறிப்பிடத்தக்கது.