ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த எர்னஸ்டோ காலியோட்டா என்பவர் தனது நண்பருடன் சிறிய விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.

விமானம் 2 ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது சிறிய ஜன்னல் வழியாக எர்னஸ்டோ தனது ஐபோன் மூலம் இயற்கையைப் பதிவு செய்தார். அப்போது எதிர்பாரதவிதமாக ஐபோன் தவறி கீழே விழுந்தது.

பின்னர் தரையிறங்கிய எர்னஸ்டோ தொலைந்து போன ஐபோனை அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஜிபிஎஸ் உதவியுடன் கண்டுபிடித்தார். கடற்கரை மணலில் எந்தச் சேதமுமின்றி அந்த போன் கிடந்தது தெரியவந்தது.