அமெரிக்காவில் உள்ள பினான்ஸ் பஸ் என்ற நிறுவனம் 13 திகில் படங்களை பார்ப்பதற்கு 1300 டாலர் வழங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . 1300 டாலர் என்பது இந்திய மதிப்பின்படி 95 ஆயிரம் ஆகும் .

குறைந்த பட்ஜெட்  திரைப்படமும் , அதிகபட்ச பட்ஜெட்   திரைப்படமும் ,  பட வரிசையில் உள்ளது . இதில் எந்த வகையான திரைப்படங்கள் மக்களுக்கு அதிக திகிலை  ஊட்டுகிறது. மேலும் எந்தப்படம் மக்களுக்கு அதிக பாதிப்பை  ஏற்படுத்துகிறது . என்பதை ஆராயவே இந்த புதுமையான முயற்சியை மேற்கொள்வதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது .

மேலும் இந்தப் போட்டிகளில் பங்குபெற சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன .

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்  வேண்டும் . அமெரிக்க குடியுரிமை கொண்டவராக இருத்தல் வேண்டும் .

13 படத்தின் பட்டியல் கொடுக்கப்படும் வரிசையில் பார்த்தல் வேண்டும் . பத்து நாட்களுக்குள் இந்த படங்கள் பார்த்து முடிக்க வேண்டும். மேலும் இவர்களது இதயத்துடிப்பு கண்காணிப்பிலேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .