ஆப்கானிஸ்தானில் மாணவிகள் சிலர் மீண்டும் நேற்று பாடசாலைக்கு சென்றனர்.

பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள வகுப்பறைகளில் நேற்று கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாடசாலைகள்மீண்டும் ஆரம்பமாகும் என தலிபான்கள் அறிவித்துள்ளதை தொடர்ந்தே மாணவிகள் மீண்டும் பாடசாலை சென்றனர்.

பொருளாதார இயல்புவாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்துவதில் தலிபான்கள் பலத்த சிரமத்தை  எதிர்கொண்டுள்ள நிலையில்  காபுலில் பல கல்விநிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன.

இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்த அடிப்படைவாத கொள்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்ட வகுப்பறைகளில் மாணவிகள் கல்விகற்க முடியும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

எங்கள் பாடசாலையில் பிரச்சினை இல்லை காலையில் மாணவிகள் கல்விகற்கின்றனர் மதியம் மாணவர்கள் கல்விகற்கின்றனர் பெண்களே மாணவிகளிற்கு கல்வி கற்பிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.