வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுமாறு வலியுறுத்தி விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க  மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல்  தனியார் பெரு நிறுவனங்களுக்கு  ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும். போராடும் விவசாயிகளை அன்னிய கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய அரசு முத்திரை குத்துகிறது.

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.