Breaking News

ஆக்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரி - யார் இந்த ஆதில்?

ஆக்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரி - யார் இந்த ஆதில்?

நியுசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள லைன் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர்  இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் இவர் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முகமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989 ம் ஆண்டு  கடைசி மகனானபிறந்தவர்  முகமது சம்சூதீன் ஆதில்  அவருக்கு சகோதரியும் 2  இரண்டு சகோதரன்களும் உள்ளனர்.

ஆதில் ஆரம்ப கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக  1998 ம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது அவரது குடும்பத்தினர்  இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில்  வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆதில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம்  கல்வி கற்று 2006ம் ஆண்டு பரிட்சை எழுதிய பின்னர் 2011 ம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளார்.

இவரின் தந்தையார் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருதுடன் அவருடன்  கனடாவிற்கு சென்று குடியேறி வாழந்துவருகின்றார்.

அதேவேளை ஒரு சகோதாரன்; கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்துவருதாகவும்  அடுத்த சகோதரன் சவூதியில்  இருப்பதாகவும் கொலன்னாவையில் சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு தமது காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் தாயார் வசித்துவருகின்றார் என இலங்கையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் 2011 இல் மாணவர் விசாவில் நியூசிலாந்திற்கு வந்த ஆதில் நியூசிலாந்தில் அகதிகள் அந்தஸ்த்துக்கான அவரது வேண்டுகோள் 2012 இல் நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் குடியுரிமை நியூசிலாந்து அவரது கூற்று "நம்பகத்தன்மை இல்லாதது" என்று தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து அவர் குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக முறையிட்டு அதில் வெற்றிப்பெற்றார்.பின்னர் அவருக்கு 2013 ஆம் ஆண்டில் அகதிகள் அந்தஸ்த்து வழங்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டில்,குறித்த பயங்கரவாதி அவர் ஆன்லைனில் இடுகையிட்ட சில விஷயங்கள் காரணமாக காவல்துறை மற்றும் நியூசிலாந்தின் பாதுகாப்பு புலனாய்வு சேவையின் கவனத்திற்கு வந்தார்.

இந்த விசாரணைகளின் போது, ​​குடிவரவு NZ தனிநபரின் அகதி அந்தஸ்த்து மோசடியாக பெறப்பட்டதாக நம்புவதற்கு வழிவகுத்த தகவலை அறிந்திருந்தது.

அவரது அகதி அந்தஸ்து மற்றும் நியூசிலாந்தில் தங்குவதற்கான அவரது உரிமையை ரத்து செய்ய செயல்முறை தொடங்கியது.

"பிப்ரவரி 2019 இல், குடிவரவு நியூசிலாந்து அவரது அகதி நிலையை ரத்து செய்தது.

பின்னர் அவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டன," என்று பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.

இந்த நேரத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு பல காரணங்களுக்காக குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

2021 மே மாதம் குற்றவியல் விசாரணை முடிவடையும் வரை நாடு கடத்தல் மேல்முறையீடு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த நபர் இறுதியாக இந்த கடந்த மே மாதம் ஆக்லாந்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பயங்கரவாதத்தை ஊக்குவித்த ISIS பிரச்சாரம் மற்றும் தேடுதலுக்கு இணங்காத ஒரு குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் ஜூலை மாதம் அவருக்கு சமூகவலைதளங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதுடன் அந்த நபருக்கு ஒருவருட முழு நேர பொலிஸ் காவல்துறை மேற்பார்வை கண்காணிப்பில் இருப்பதற்கான தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 53 நாட்களாக 30 பேர் அவரை கண்காணித்ததாக காவல்துறை ஆணையாளர் தெரிவித்தார்.

இவ்வாறு பொலிஸார் மேற்பார்வையில் இருந்த குறித்த நபர் நேற்றுமுன்தினம் ஆக்லாந்தில் விற்பனை நிலையத்தில் மேற்கொண்ட தீவிரவாத தாக்குதலில் 60 விநாடிகளில் பொலிஸாரால் சுட்டு கொன்றனர்.

இது குறித்த அவருடைய தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கூறியதாவது....

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பின்னரே தனது மகன் சம்சூதின் ஆதிலிடம் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அவர் கல்வி பயின்ற நியூசிலாந்து பல்கலைக்கழக்தில் விபத்தொன்று ஏற்பட்டதாகவும், இதன்போது ஆதிலை அவரது நண்பர்களே காப்பாற்றி இருந்ததாகவும் தெரிவித்த தாயார், இதனைத் தொடர்ந்தே ஆதிலுக்கு சிரியா மற்றும் ஈராக் நாட்டு நண்பர்கள் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.

நண்பர்களின் ஊடாகவே அவன் தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணியிருக்க வேண்டுமெனவும், தனது மகனுக்கு மூளைச் சலவை (Brain wash) செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இவரால் தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் மேலும் தொடர்கிறது அரச குற்றப்புலனாய்வு துறையின் விசாரணை.