நேற்று இரவு North Shore மருத்துவமனையில் 90 வயதான பெண் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்தார் இந்நிலையில் நியூசிலாந்தில் கொவிட் -19 தொற்றால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சமூகத்தில் 20 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில் ஆக்லாந்தின் மருத்துவமனைகளில் இப்போது 43 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் ஏழு பேர் ஐசியுவில் உள்ளனர்.