சமூகத்தில் 83 புதிய கொவிட்-19 தொற்றுகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் அறிவித்துள்ளார்.

இதில் 82 பேர் ஆக்லாந்திலும், ஒருவர் வெலிங்டனிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 511 ஆக உயர்வடைந்துள்ளது.

இதில் 496 பேர் ஆக்லாந்திலும் மீதமுள்ள 15 பேர் வெலிங்டனிலும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்தார்.