தேனீயும் வண்ணத்துப் பூச்சியும் பூவில் தேனெடுக்கிறது.ஒன்று சேமிக்கிறது.ஒன்று பசியாத்துகிறது.

யார் பெத்த பிள்ளையோ இப்படி கெடக்குது என்று இன்னொரு பெத்த மனசு பொலம்பலோடு கடந்து செல்கிறது.

தேடித் தேடி பிரண்ட் ரிக்வொஸ்ட் கொடுத்திடுறோம்,ஆனா நட்பை வளக்க மறந்திடுறோம் சில நேரங்களில்.

பக்கத்து வீட்டுக்காரனுக்கு கொலப்பசி.ஆனா பக்கிங்காம் கால்வாயில் உள்ளவனுக்கு ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்து கொடுக்கிறோம்.

உங்க குழந்தைக்கு சரியா சொல்லித்தர்றது இல்லையா எனக் குழந்தையின் பெற்றோரிடம் கேட்கிறார் ஊட்டி கான்வென்ட் ஸ்கூல் டீச்சர்.

முன்பெல்லாம் மேரேஜ் ஆல்பத்தை குழந்தைகளிடம் காண்பிக்கும்போது "நான் ஏன்ப்பா இந்த போட்டோல இல்ல" என கேட்பதுண்டு.ஆனால் தற்போது அந்தக் கேள்வி வராது,ஏன்னா சில கல்யாணத்துல பெத்த பொண்ணுங்க தான் தொனப்பொண்ணு.எப்பூடி

பிலிம் ரோலில் நெகட்டீவ்னு எடுத்த காலம் போய், இப்போ வூட்டவுட்டு வெளியே போய்ட்டுவந்தா பாசிட்டிவ்வா நெகட்டீவ்வான்னு கேக்குறாங்க...காலம் செய்த கோலமடி கொரோனா செய்த குற்றமடி

நாடி துடிக்காமல் போன நிலையில் நாடி பிடித்து பார்த்தார் நாடி வைத்தியரை நாடிப் போனதினால்

கவியெழுத்து விஜயகுமார்