பொறிஞர் விஜயகுமார் - கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர்

தானியங்கி ஊர்தியில் பொறியியல் பட்டம் பெற்று வடிவமைப்பு மற்றும் சோதனை துறைகளில் பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் எழுத்தாளர் விஜயகுமார்.

 2011ல் இருந்து இடை இடையில் எழுத ஆரம்பித்து பின்னர் 2015இல் இருந்து தொடர்ச்சியாக கவிதைகள் , கட்டுரைகள் கதைகள்,நேர்காணலுக்கான உரையாடல்கள் , தமிழர் திருவிழாவுக்கான மடல்கள்,குறிப்புகள் என பல கோணங்களில் எழுதி வந்தார்.

இந்த வரிசையில் 2019 மே மாதம் தமிழ்நாடு மாநில முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை பற்றி எழுதிய கவிதைக்கு "அம்மா விருது" வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து "கவிமழை விருது",..."வேறென நீ இருந்தாய்"எனும் அப்பா பற்றிய ஒரு கவிதை படைப்புக்கு மூன்றாவது பரிசு "தமிழன் அறம்"என்ற தலைப்பில் உருவான கவிதை படைப்பிற்குமூன்றாம் பரிசு என இவர் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

அத்துடன் நின்றுவிடாமல் "நெருஞ்சிப்பழம்"என்ற கவிதை புத்தகத்தை 2019ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.மேலும் "மழலை என்னும் பூங்குழலி" எனும் மற்றுமொரு கவிதை புத்தகத்தை 2020 மார்ச் மாதம் எழுதி வெளியிட்டார்.மேலும் "இடை ஈர்ப்புவிசை" என்ற கவிதை புத்தகம்,"An era that never fade away'" என்ற நாவலையும் எழுதி வெளியிட்டார்.

கவிதை நாவல்கள் உடன் நிறுத்திவிடாமல் "சென்னை வட்டார வழக்கு மொழி மற்றும் கலப்பு தமிழ்" என்கின்ற தலைப்பிலான கட்டுரை, "மே தின சிறப்பு கட்டுரை" என பல கட்டுரைகளையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

Independence Tamil Album songs, மற்றும் பல பாடல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்

கவியெழுத்து விஜயகுமார் அவர்களின் இந்தக் கலைப் பயணம் தொடர அரசனின் வாழ்த்துக்கள்.