பிரித்தானியா இங்கிலாந்தில் தடை செய்யப்படக்கூடிய பல பொருட்களில் ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் தட்டுகள், உணவை உண்ண பயன்படுத்தப்படும் கத்திகள், முட்கரண்டி, கரண்டிகள் மற்றும் கப்கள் ஆகியவை அடங்கும் என அரசாங்கம் கூறியுள்ளது. இலையுதிர்காலத்தில் தொடங்கப்பட்ட புதிய பொது ஆலோசனையின் ஒரு பகுதியாக இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலாக ஒரு டன்னுக்கு 200 பவுண்டுகள் என ஏப்ரல் 2022 முதல் ஒரு உலகளாவிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் வரியையும் அறிமுகப்படுத்துவோம் எனவும் குறைந்தபட்சம் 30% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும் என்ற வரம்பை பூர்த்தி செய்யாது பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கு இந்த வரி விதிக்கப்படும் என சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது