ஆப்கான் முன்னாள் அமைச்சர் டெலிவரி தொழில் செய்கின்றார்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சையத் அஹ்மத் சதாத்தின் டெலிவரி தொழில் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

ஆப்கானிஸ்தான் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் சேர்ந்தார் ஆனால் அஸ்ரப் கனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020 இல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

அவர் பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு சென்ற பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனி சென்றடைந்த சதாத், லீப்ஜிக்கில் வசிக்கிறார்.

கடந்த செப்டம்பரில் ஜேர்மன் சென்ற இவர் அங்கு இவ்வாறான தொழிலை தெரிவுசெய்துகொண்டார்.

தாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊழல் மோசடி செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றும் மக்களுக்குத்தான் தாம் சேவை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.