நேற்றையதினம் ஒரு பாதையில் இருந்த 50 மலையேற்ற வீரர்களில் ஒருவர் விபத்துக்குள்ளாகி காயமடைந்ததாக குயின்ஸ்டவுன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த குறித்த பெண் சைக்கில் ஓட்டுனரை மீட்க பல போலீஸாரும் ஆம்புலன்ஸ் ஊழியர்களும் 

இரண்டு மணி நேரத்திற்கு மேல் மீட்பு பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஃபெர்ன்ஹில்லில் உள்ள ஒரு மலை பைக் பூங்காவில் குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் குறித்த பெண் ஹெலிகாப்டர் மூலம் டுனெடின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்தில் பாதையில் 50இற்கு மேற்பட்ட மலையேறுபவர்கள் இருந்ததாக அதிகாரிகள் மதிப்பிட்டனர்.

காவல்துறையினர் சைக்கில் ஓட்டுனர்களுடன் பேசுவார்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதற்கான நடவடிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஆண்ட்ரூ கோஸ்டர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்..

"எச்சரிக்கை நிலை நான்கின் கீழ் உடற்பயிற்சி உங்கள் சுற்றுப்புறத்தில் மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் மீட்பு அல்லது அவசரகால சேவைக்கு வழிவகுக்கும் எந்தவொரு பொழுதுபோக்கு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது என்பதை நாங்கள் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.