பெருகிவரும் சிறைச்சாலை மக்கள்தொகையை சமாளிக்க அரசாங்கத்தின் விரைவான கட்டுமான சிறைச்சாலைகளில் பாதி நிறைவடைந்து பயன்படுத்த தயாராக உள்ளதாக திருத்தங்கள் துறை தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில், டெக்மில் நிறுவனம் சிறைச்சாலை மக்கள்தொகையை சமாளிக்க 960 செல்களை உருவாக்க ஒப்பந்தம் செய்த நிலையில் அந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு நிறைவு நேரங்கள் மற்றும் தரம் தொடர்பான பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டது.மேலும் புதிய ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ரோலஸ்டன் சிறைச்சாலையில் இரண்டு units, டோங்காரிரோ மற்றும் கிறைஸ்ட்சர்ச் பெண்கள் சிறையில் தலா ஒரு unit சேவைக்கு தயாராக இருப்பதாக திருத்தங்கள் துறை தெரிவித்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் அவற்றைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச் ஆண்கள் சிறைச்சாலை மற்றும் ரிமுதகா சிறைச்சாலையில் மீதமுள்ள நான்கு Unitகள் இவ்வருட இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட 436.1 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் பணிகள் முடிக்கப்படும் என்று திருத்தங்கள் துறை மேலும் தெரிவித்துள்ளது.