மத்திய டன்னீடனில் இரண்டு கார் மோதிய விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் நகரத்தின் தெற்குப் பகுதியில் Cumberland மற்றும் Howe தெருக்களின் சந்திப்பில் குறித்த விபத்து நடந்தது.

காரின் ஓட்டுநரும் பயணிகளும் காருக்குள் சிக்கியிருந்த நிலையில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் பலத்த காயமடைந்த இருவர் ஆம்புலன்ஸ் மூலம் டன்னீடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக St John செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.