நியூசிலாந்தின் முதல் தடுப்பூசி நிகழ்வு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிகளவு மக்கள் பங்கேற்க வரிசையில் காத்திருந்தனர்.

தடுப்பூசி பெற, மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் வோடபோன் நிகழ்வுகள் மையத்திலிருந்து சாலையின் சற்று மேலே உள்ள மனுகாவ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) இல் பதிவு செய்ய வேண்டியிருந்தது.

எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் இன்று காலை MITகு வந்தனர்.

ஆக்லாந்தின் கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் இயக்குனர் மாட் ஹன்னன்ட், MIT இல் நிகழ்விற்கு பதிவுசெய்ய ஏராளமான மக்கள் வந்து வரிசையாக நின்றனர்.

"மக்களை விரைவாகப் பதிவு செய்ய உதவுவதற்காக நாங்கள் கூடுதல் பதிவு ஊழியர்களை நியமித்துள்ளோம்,மேலும் தற்போது எந்தப் பின்னடைவுகளையும் தவிர்க்க எங்களால் முடிந்தவரை வேகமாக வேலை செய்கிறோம்.

முன்பு வரிசையில் இருந்தவர்களுக்கு அவர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், மேலும் வருகை தரும் ஒவ்வொருவரும் தடுப்பூசியை விரைவாகவும் திறமையாகவும் பெற எங்கள் குழு செயல்படுகிறது எனவும் மேலும் நியூசிலாந்தில் இந்த அளவிலான முதல் தடுப்பூசி நிகழ்வு இது என்றும் அவர் கூறினார்.