ஹாமில்டனில் உள்ள ஒரு கடையை ஒரு ஆண்கள் குழுவினர் இன்று கொள்ளையடித்துள்ளனர்.

இன்று காலை 7.10 மணியளவில் அவலோன் டிரைவில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மூன்று ஆண்கள் கடைக்குள் நுழைந்து பல பொருட்களை திருடிக்கொண்டு ஒரு வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆண்களால் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் எனினும், அவர் காயமடையவில்லை.இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.