இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்களை எடுத்தது.

276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை பெற்று போட்டியை வென்றது .

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது மற்றும் தொடரையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.